ஈஷா சார்பில் நெல்லையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி – விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Scroll Down To Discover
Spread the love

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று (டிசம்பர் 20) சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்படுத்துகள் வழிமுறைகள் குறித்து செயல் முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மொத்தம் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட வகுப்புகள் மூலம் 8.700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.