ஃபிட் இந்தியா ஃபிரிடம் ரன் : என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம்.!

Scroll Down To Discover

பேராவூரணியில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம் நீலகண்டபிள்ளையார் கோவில் அருகில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்சிசி மாணவர்களின் ஃபிட் இந்தியா ஃபிரிடம் ரன் என்ற விழிப்புணர்வு முகாம் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஆர் .பி . ராஜேந்திரன், உதவித் தலைமையாசிரியர் சோலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

என்சிசி அலுவலர் என். சத்தியநாதன் மாணவர்களுக்கு உடல் பயிற்சியை செய்து காட்டினார். மாணவர்கள் உடற்பயிற்சி செய்தனர் இந்நிகழ்ச்சி இப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.