தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர் ஆதம் காசியார், மாவட்ட துணை செயலாளர் அகமது அலி ரஜாய், கிளை தலைவர் முகம்மது கனி,கிளை செயலாளர் ஜவ்ஹர் அலி, ஒன்றிய செயலாளர் திவான் ஒலி,துணை செயலாளர்கள் அப்துல் ரஹிம், அக்பர் அலி,
மனித உரிமை அணி செயலாளர் நாகூர் மைதீன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் யஹ்யா சேக், மாணவர் அணி செயலாளர் சேக் செய்யது, தவ்பீக், அகில் ஜூபைர், செய்யது அன்சாரி, ராசப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணக்காடு பகுதி, மேலத்தெரு, சத்யா நகர், கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு கஷாயம் வழங்கப்பட்டது. சுமார் 1200 நபர்களுக்கு கஷாயம் வழங்கப்பட்டது.
செய்தி : Rajay

Leave your comments here...