80 கோடிக்கு எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா..? முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!

அரசியல்

80 கோடிக்கு எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா..? முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!

80 கோடிக்கு எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா..?  முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம் என முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்

திருச்சியில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்ல திருமண விழாவிற்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி ஏர்போர்ட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில், எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க., வினர் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கிய திட்டங்களை, திமுக அரசின் மெத்தன போக்கால் முடக்கி வைத்துவிட்டு, புரிந்து கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் திட்டங்கள் முடங்கி விட்டதாக கூறுகிறார். அ.தி.மு.க., அரசின் திட்டங்களை தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்ததாக பேசுகின்றனர்.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம். மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆகியவை ஆட்சிக்கு வந்து திமுக செய்த சாதனைகள் ஆகும். ஆன்லைன் ரம்மியில் கிடைக்கும் பணம் யாருக்கு செல்ல வேண்டுமோ, அவர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் இருப்பதாக, தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தி.மு.க.,வினர் தற்போது நிதி இல்லை என்று சொல்கின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் இல்லை. அதனால் நமக்கு என்ன பலன். கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்வி கடன் ரத்து என்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள்

எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.,வை தொட்டுக் கூட பார்க்க முடியாது. நான் பெரிய தலைவனாக இருந்து வரவில்லை. பன்னீர் செல்வத்துடன் 10 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இருந்தனர். அ.தி.மு.க.,வினர் விரும்பியதால் தான், அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தற்போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உள்ளது.

ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்லும் பன்னீர்செல்வம், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது அ.தி.மு.க., அரசுக்கு எதிராக ஓட்டளித்தார். 1989 ல் போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, வெண்ணிற ஆடை நிர்மலாவின் சீப் ஏஜெண்டாக பன்னீர்செல்வம் செயல்பட்டவர்.
குண்டர்களுடன் சேர்ந்து அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் பன்னீர்செல்வம். என்னுடன் இருப்பவர்கள் கட்சியை நேசிப்பவர்கள் உண்மையாக உழைப்பவர்கள் அ.தி.மு.க ., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், என்று நினைக்கின்றனர். இவ்வாறு , அவர் பேசினார்.

Leave your comments here...