போரில் வெற்றி பெறும்வரை உக்ரைனைவிட்டு வெளியேற மாட்டேன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி..!

உலகம்

போரில் வெற்றி பெறும்வரை உக்ரைனைவிட்டு வெளியேற மாட்டேன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி..!

போரில் வெற்றி பெறும்வரை உக்ரைனைவிட்டு வெளியேற மாட்டேன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி..!

உக்ரைன் நாட்டின் சுமி நகரில் குடியிருப்பு பகுதிகளில் ரஷிய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 2 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 9 பேர் பலியானதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரஷிய எல்லையில் உள்ள உக்ரைன் நகரான சுமியின் 700 இந்திய மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.அவர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் நிலையில் நேற்று இரவு சுமி நகரின் மீது ரஷிய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

கீவ்வில், செர்னிவ், கார்கீவ், மரியும்போல் ஆகிய நகரங்களில் ரஷிய அறிவித்த போர் நிறுத்தத்திற்கு சில மணி நேரங்களுக்கு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உக்ரைன் நாட்டில் இருந்து தான் தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான தகவல்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியாகி உள்ள அவரது பேட்டியில், உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து போராடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைநகர் கீவ்-வில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்தபடி ஜெலன்ஸ்கி அந்த வீடியோவை எடுத்துள்ளார்:- ‘ நாங்கள் நாட்டில் தான் உள்ளோம், ராணுவம் எங்களுடன் உள்ளது. எங்கும் தப்பி செல்லவில்லை. நான் பின்வாங்க மாட்டேன்.இது எனது நகரம். ஒவ்வோரு உக்ரைன் குடிமகனும் ரஷியாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.ரஷிய வீரர்கள் துப்பாக்கிச் சூட்டை தைரியமாக எதிர்கொண்டு வருகிறோம், போரில் வெற்றி பெறும்வரை உக்ரைனைவிட்டு வெளியேற மாட்டேன்.யாரைக் கண்டும் எனக்கு அச்சம் இல்லை.’என்றார்.அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பதை தடுக்க அவர்களை பாதுகாப்பாக ரஷியா அல்லது பெலாரசுக்கு வெளியேற்றும் திட்டத்தை முன்மொழிந்த ரஷியா அங்கெல்லாம் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆனால் இதனை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது.

Leave your comments here...