கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தல்… உலகளவில் “கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்”- ரஷ்யா எச்சரிக்கை

உலகம்

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தல்… உலகளவில் “கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்”- ரஷ்யா எச்சரிக்கை

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தல்…  உலகளவில் “கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்”- ரஷ்யா  எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், “உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த பிறகு பொருளாதார ரீதியா அந்நாட்டை முடக்கும் நோக்கில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகியவை ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது. ரஷ்யாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய வங்கிகள் தடை செய்யப்பட்டன. ரஷ்யாவில் உள்ள பெரும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இதனால் டாலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் கரன்ஸி மோசமாக வீழ்ச்சியடைந்தது. தற்போது ரஷ்யா பொருளாதார ரீதியாக தனிமை படுத்தப்பட்ட நாடாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் கச்சா எண்ணெய், இயற்க்கை எரிவாயுவுக்கு ரஷ்யாவை சார்ந்துள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு புதிய நெருக்கடிகளை கொடுக்க பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளன. இந்த நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவ்வாறு எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 300 டாலராக உயரும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை எதிர்காலத்தில் எந்த அளவு உயரும் என கணிக்க முடியாது என்றும், இது உலக பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ஒருமித்த முடிவு இதுவரை எட்டப்படவில்லை.

Leave your comments here...