சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயக்கம்..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயக்கம்..!

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயக்கம்..!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் இன்று முதல் 100 சதவீதம் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதேபோல் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது. கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் சென்னையில் இன்று முதல் மீண்டும் மின்சார ரயில் சேவை முழு அளவில் 100 சதவீதம் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று முதல் வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave your comments here...