ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் புது உத்தரவு..!

இந்தியா

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் புது உத்தரவு..!

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் புது உத்தரவு..!

மத்திய அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் ‘டாடா’ குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து டாடா குழுமம், ஏர் இந்தியா விமான ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:விமான ஊழியர்கள் குறைந்தபட்ச நகைகள் மட்டுமே அணிந்து வர வேண்டும். பணியில் இருக்கும்போது மது அருந்தக் கூடாது. மது அருந்தி பணிக்கு வரக்கூடாது.

பணி நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள ‘டூட்டி ப்ரீ’ எனப்படும் வரி இல்லாத பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக் கூடாது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...