லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவனே திடீர் ஆய்வு

Scroll Down To Discover

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

லடாக் எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று லடாக் பயணம் மேற்கொண்டார். கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு பணிகளை நரவனே ஆய்வு செய்தார்.

மேலும், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தினார்.