கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், விமானப்படையும், கடற்படையும் போர்க்கால அடிப்படையில் ஒத்துழைப்பு.!

இந்தியா

கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், விமானப்படையும், கடற்படையும் போர்க்கால அடிப்படையில் ஒத்துழைப்பு.!

கொரோனா  இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், விமானப்படையும், கடற்படையும் போர்க்கால அடிப்படையில் ஒத்துழைப்பு.!

கொரோனா சூழலை சமாளிக்க, மருத்துவ சாதனங்களை அதிகரிக்க தேவையான போக்குவரத்து உதவிகளை வழங்குவதில் இந்திய விமானப்படையும், கடற்படையும் அயராது பணியாற்றி வருகின்றன. மே 10ம் தேதி காலை வரை, இந்திய விமானப்படை விமானங்கள், 534 பயணங்கள் மூலம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 336 ஆக்ஸிஜன் கன்டெய்னர்களில் 6,420 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மற்றும் இதர மருத்துவ சாதனங்களை கொண்டு வந்துள்ளன.

ஜாம்நகர், போபால், சண்டிகர், பனாகர், இந்தூர், ராஞ்சி, ஆக்ரா, ஜோத்பூர், பெகும்பேட், புனே, சூரத், ராய்ப்பூர், உதய்ப்பூர், மும்பை, லக்னோ, நாக்பூர், குவாலியர், விஜயவாடா, பரோடா, திமாபூர் மற்றும் ஹிண்டன் ஆகிய இடங்களுக்கு விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன.

84 சர்வதேச பயணங்களையும் இந்திய விமானப்படை விமானங்கள் மேற்கொண்டு, மொத்தம் 1,407 மெட்ரிக் டன் திறனுள்ள, 81 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் சேமிப்பு கன்டெய்னர்கள், 705 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஜியோலைட்(ஆக்ஸிஜன் மூலப் பொருள்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளன. இவைகள் சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.


‘‘சமுத்திர சேது -2’’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் ஐராவத், திரிகண்ட், கொல்கத்தா போன்ற போர்க் கப்பல்கள் நட்பு நாடுகளிடம் இருந்து முக்கியமான கொவிட்-19 மருத்துவ பொருட்களை இன்று கொண்டுவந்துள்ளன. ஐஎன்எஸ் தல்வார் போர் கப்பல் கடந்த மே 5ம் தேதி அன்று நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தது. அவற்றின் விவரம்:

ஐஎன்எஸ் ஐராவத் கப்பல், சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து 8 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்குகள், 3,898 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இதர மருத்துவ பொருட்களுடன் இன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தது.

ஐஎன்எஸ் திரிகண்ட் போர்க்கப்பல், கத்தாரில் உள்ள தோகா துறைமுகத்திலிருந்து 40 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை, மும்பைக்கு இன்று காலை கொண்டு வந்தது.ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், கத்தார் மற்றும் குவைத்திலிருந்து 400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 2 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கன்டெய்னர்கள், 47 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றை நியூ மங்களூர் துறைமுகத்துக்கு இன்று கொண்டு வந்தன.

ஐஎன்எஸ் தல்வார் போர்க்கப்பல், பஹ்ரைனிலிருந்து 2 ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை நியூ மங்களூர் துறைமுகத்துக்கு கடந்த 5ம் தேதி கொண்டு வந்தது.இவை தவிர ஐஎன்எஸ் கொச்சி, தபால், ஜலஸ்வா, சர்துலேர் போன்ற கப்பல்கள் நட்பு நாடுகளிடம் இருந்து கொவிட் நிவாரண பொருட்களை கொண்டுவரவுள்ளன.

Leave your comments here...