குளிர்பான பவுடரில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.20 கோடி தங்கத் துகள்கள் பறிமுதல்.!

தமிழகம்

குளிர்பான பவுடரில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.20 கோடி தங்கத் துகள்கள் பறிமுதல்.!

குளிர்பான பவுடரில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.20 கோடி தங்கத் துகள்கள் பறிமுதல்.!

குளிர்பான பவுடரில் மறைத்து, புதுவிதமாக கடத்தி வரப்பட்ட தங்க துகள்களை சென்னை சுங்கத்துறை கைப்பற்றியது. தபால் பார்சல் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை சுங்கத்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் துபாயில் இருந்து, சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட பார்சலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதித்தனர். அதில் விதைகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்ததில், 2.5 கிலோ எடையில் 4 டின்கள் இருந்தன. அதில் டேங்க் ஆரஞ்சு குளிர்பான பவுடர் இருந்தது.


மேலும் வெள்ளை ஓட்ஸ் மற்றும் சாக்லெட்டுகளும் இருந்தன. ஒரு டின் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. அந்த டின்-ஐ திறந்து பார்த்ததில், குளிர்பான பவுடருடன் தங்கத் துகள்கள் கலந்திருந்தன. அவற்றிலிருந்து 2.5 கிலோ தங்க துகள்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.20 கோடி. சுங்கச் சட்டத்தின் கீழ் இவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இருந்த முகவரி தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதில் தபால் அலுவலக ஊழியர்களின் பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...