50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் : பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன…?

அரசியல்தமிழகம்

50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் : பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன…?

50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் : பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன…?

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்.6-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பாஜக இன்று ‘தொலை நோக்கு பத்திரம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

இதில் மாநில தலைவர் முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:


-50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
-விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கும் வருடாந்தர உதவித்தொகை வழங்கப்படும்.
-தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடமே வழங்கப்படும்.
-18 முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
-சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகாளகப் பிரிக்கப்படும்.
-தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்.
-விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்படும்.
-பூரண மதுவிக்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்.
-இந்து கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
-தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் தமிழ்நாட்டை உருவாக்கப்படும்.
-ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு பல்நோக்கு மருத்துவனைகள் நிறுவப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
-பெண் சிசுக் கொலை முழுவதுமாகத் தடுக்கப்படும்.
-முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்திற்கு இலவசப் பேருந்துப் பயணம்.
-தேசியக் கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும்.
-பள்ளிப் பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மீக நூல்கள் சேர்க்கப்படும்,
-கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும்.
-பசுவதைத் தடைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும்.
-தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

Leave your comments here...