லடாக்கில் சீனாவின் அத்துமீறலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு நினைவுச்சின்னம்.!

இந்தியா

லடாக்கில் சீனாவின் அத்துமீறலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு நினைவுச்சின்னம்.!

லடாக்கில் சீனாவின் அத்துமீறலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு நினைவுச்சின்னம்.!

கடந்த ஜூன் 15ல் லடாக்கில் சீனாவின் அத்துமீறலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் பிங்கர் பகுதி, கல்வான் பள்ளத்தாக்கு, கொங்ருங் நாலா ஆகிய பகுதிகளில் சீனா அத்துமீறலை தொடர்ந்து, அங்கு, இந்தியா மற்றும் சீனா ராணுவம் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ஜூன் 15 ல், சீன ராணுவம் அத்துமீறி, இந்திய பகுதிக்குள் நுழைந்தது. அதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, சீன வீரர்கள் கடுமையாக தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நமது வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை சீனா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் , லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு கால்வன் மோதலில் உயிரிழந்த 20 வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜூன் 15ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

Leave your comments here...