ஆட்டோ மரத்தில் மோதி விபத்து – கூலி வேலைக்குச்சென்ற 15 பெண்கள் படுகாயம்.!

தமிழகம்

ஆட்டோ மரத்தில் மோதி விபத்து – கூலி வேலைக்குச்சென்ற 15 பெண்கள் படுகாயம்.!

ஆட்டோ மரத்தில் மோதி விபத்து – கூலி வேலைக்குச்சென்ற 15 பெண்கள் படுகாயம்.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, செம்பட்டையான் காலனி பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள் சுப்புலாபுரம் பகுதிக்கு தினமும் கூலி வேலைக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர்.

இன்றும் வழக்கம் போல வேலைக்குச் சென்று, வேலைகளை முடித்துவிட்டு ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில், லட்சுமியாபுரம் அருகே வந்துகொண்டிருந்த போது, திடீரென்று ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையருகே இருந்த மரத்தில் ஆட்டோ மோதியது.

விபத்தில் சிக்கி ஆட்டோவில் இருந்த 15 பெண்களும் படுகாயம் அடைந்தனர். விபத்து கேள்விப்பட்ட கிருஷ்ணன் கோவில் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் லட்சுமி (45) என்ற பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Leave your comments here...