ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கு : சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை

இந்தியா

ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கு : சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை

ஹத்ராஸ்  இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கு  : சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி வருகின்றனர். காங். எம்.பி. ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் பாலத்கார வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஹத்ராசில் நடந்த துரதிருஷ்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவதற்காகவும், சி.பி.ஐ. மூலம் ஒரு விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு பரிந்துரைக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


ஆனால் இந்த அறிவிப்பை இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நடைபெறும் விசாரணையே தேவை என அவர்கள் கூறியுள்ளனர்.

Leave your comments here...