குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி..!

Scroll Down To Discover
Spread the love

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் அமளியை ஏற்படுத்தியமைக்காக 20-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி. லோக்சபாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவதூறாக பேசினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.

பின்னர் அவ்வாறு பேசியமைக்காக தாம் மன்னிப்பு கேட்பதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி யை நேரில் சந்தித்து பேச தயார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அதில் தாம் ‘நா’ பிறழில் தவறான வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளர்.