நாங்குநேரி தொகுதியில் களம் இறக்கிறார் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன்.

Scroll Down To Discover
Spread the love

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது உள்ளது. இதற்கான ஒப்புதலை கட்சித் தலைவர் சோனியாகாந்தி அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார். ரூபி மனோகரன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.