நதிநீர் பங்கீடு..! தமிழகம் மற்றும் கேரளா முதல்வர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை..!

Scroll Down To Discover
Spread the love

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இரு மாநில நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா முதல்வர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சாய்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.