காஷ்மீர் ஆக்கிரமிப்பு..! நேருவின் போர்நிறுத்த நடவடிக்கைத்தான் காரணம் : அமித்ஷா

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா  மாநிலத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா பங்கேற்று பேசினார்.எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும். தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக மீண்டும் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு தந்த பலத்தால், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போதே காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் துணிச்சல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்தது. அதற்காக அவரை மனமார பாராட்டுகிறேன் என குறிப்பிட்டார்.

Pictures for Amitshah Rally in Maharashtra

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. ஆனால், நாங்கள் அப்படி பார்க்கவில்லை. இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீருக்குள் துப்பாக்கிகள் மவுனித்து இருக்கின்றன. இதுவரை ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை.காஷ்மீர் முன்னர் இந்தியாவுடன் இணைக்கப்படாததற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த பிரச்சனையை சரியாக கையாளாமல் போனதுதான் காரணம். மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த விவகாரத்தை கையாண்டிருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும்.

1947-ம் ஆண்டில் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டுக்குள் ஊடுருவியபோது நம்முடைய ராணுவம் முழு பலத்துடன் போரிட்டது. ஆனால், அன்றைய பிரதமர் நேரு அவசியமற்ற நேரத்தில் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மட்டும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதி உருவாகாமல் போயிருக்கும்.சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. மோடி, பதவி ஏற்றபிறகு, சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கியுள்ளோம் என அமித்ஷா தெரிவித்தார்