குமரி மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம்.!கல்குவாரிகளுக்கு வருகிறதா தடை..?

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 கிராமங்கள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இக்கிராமங்களில் இயற்கையை பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் களியல் முதல் பணக்குடிவரை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளை ஒட்டியுள்ள கடையல், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டிபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குலசேகரபுரம் உள்ளிட்ட 17 கிராமங்களை ‘சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக’ மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் இந்த பகுதிகளில் கல்குவாரிகளுக்கு தடை வருவதோடு, பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில் பொதுமக்களிடம் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகிறது.