யுனெஸ்கோவில் பிரதமர் மோடி முழக்கம்….!

Scroll Down To Discover
Spread the love

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் தலைநகர் பாரிசில், யுனெஸ்கோ தலைமையகத்திற்கு சென்றார். பின் பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றியபோது, மோடி மோடி என்ற முழக்கத்தால் யுனெஸ்கோ அரங்கமே அதிர்ந்தது.

 

 

கால்பந்தை நேசிக்கும் ஃபிரான்ஸ் நாட்டில், இலக்கை எட்டும் “கோல்” என்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் சாத்தியமில்லாதது என முன்னர் கருதப்பட்ட இலக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் நிர்ணயித்து நிறைவேற்றி வருவதாகவும் மோடி தெரிவித்தார். புதிய இந்தியாவில், தீவிரவாதம், ஊழல், குடும்ப ஆட்சி, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக முன்னப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்த 75 நாட்களில் புதிய அரசு பல வலிமையான முடிவுகளை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.  2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும் என்றார்.