கோயம்பேடு மார்க்கெட் சாலைகள் : உயிரோடு விளையாடும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள்…!!

Scroll Down To Discover
Spread the love

295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமாகும் கோயம்பேடு மார்க்கெட் . இங்கு தினசரி ஆயிரகணக்கான சரக்குவாகனங்கள் காய்கறி, பூக்கள், பழங்கள் என வெளிமாநிலத்தில் இருந்து வருகின்றன. இந்த வாகனங்கள் வந்து செல்ல அடிப்படை வசதிகளே கிடையாது. இதனால் சரக்கு வாகனங்களில் லோடு ஏற்றி வரும் போதும் குண்டும் குழியுமான சாலைகளில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது, உயிர்சேதம் பொருள் சேதமும் ஏற்படுகிறது. அதிலும் டூவீலரில் செல்லுவோர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இதனிடையே நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த காய்கறி வாங்கி வந்த சரக்கு வாகனம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குண்டும் குழியுமான கோயம்பேடு மார்க்கெட் சாலைகள்

இது குறித்து கோயம்பேடு அங்காடியில் உள்ள வியாபாரிகள் பலர் கூறும் போது: புரோக்கர்களை வைத்து வசூல் வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகளே இவர்கள் வியாரிகளுக்கோ மக்களுக்கோ அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தில் குண்டும் குழியமான சாலைகள் அதில் தண்ணீர் தேங்கும் அவலம் இதனால் விபத்து ஏற்ப்படுகிறது.

இதை பற்றி சி.எம்.டி.ஏ நிர்வாகம் கவலை படுவதாக தெரியவில்லை. இதே வழியாக தான் அரசு போக்கு வரத்து பேருந்துகளும் செல்லுகின்றன. கரடு முரடான சாலைகளால் சர்க்கஸ் கூடாரத்தில் வாகனம் செல்லுவது போன்ற காட்சியை தினசரி பார்க்க முடிகிறது. அதிலும் பண்டிகை காலம் இந்த குண்டும் குழியுமான ரோட்டில் வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளும், காய்கறி கொண்டு வரும் வாகனங்களால் பெரிய அளவில் டிரப்பிக் ஏற்ப்படுகிறது.  இதன் அருகே தான் மெட்ரோ தலைமை அலுவலகம் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. ஆகவே வணிகர்களின் நிலை, மக்களின் நிலைகளை அறிந்தாவது கோயம்பேடு மார்க்கெட் சாலைகளை சி.எம்.டி.ஏ நிர்வாகம்  சீர் செய்யுமா..? என்று பார்ப்போம்.!