மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி…!!

Scroll Down To Discover
Spread the love

ஹரியானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடனும்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகின்றன.

இதனையடுத்து, இரு மாநிலங்களுக்கும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், ஹரியானாவிலும் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டைம்ஸ்நவ் சேனலின் கருத்துக் கணிப்பின்படி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18 மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 243 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியா டுடேவுடன் ஆக்ஸிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 166 முதல் 194 இடங்கள் வரையும், காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 90 இடங்களைக் கைப்பற்றும் என்றும்,

ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 216 முதல் 230 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 52 முதல் 59 வரையிலான இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 71 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களையும் பெறும் என டைம்ஸ் நவ் சேனல் தெரிவித்துள்ளது. இதேபோல் நியூஸ் 18 மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 75 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 52 முதல் 63 இடங்களிலும், காங்கிரஸ் 15 முதல் 19 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.