தேசிய மாணவர் படை ஆயுதப்படைகளின் முன்னோடி: பாதுகாப்பு இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக்..!

Scroll Down To Discover
Spread the love

தேசிய மாணவர் படை, என்சிசி(NCC), ஆயுதப்படைகளின் முன்னோடி என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் கூறியிருக்கிறார். புதுதில்லியில்  தேசிய மாணவர் படைக்கான மத்திய ஆலோசனைக்குழுவின் 51-ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அவர் பேசினார்…

பயிற்சி, விளையாட்டுக்கள், தீரச்செயல்கள், சமூக சேவை, சமுதாய மேம்பாடு உள்ளிட்ட தளங்களில் என்சிசி மாணவர்களின் செயல்திறனை, பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பாராட்டினார். ஒடிஷா, பிகார், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில் என்சிசி முக்கிய பங்காற்றியது என்று அவர் கூறினார்.பயிற்சி முறைகளை பயனுள்ளதாக அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய ஆலோசனைக்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த இயக்கம், மாணவர்களின் குணம், ஒழுங்கு, தலைமைப்பண்பு குறித்த தனது பங்கை தொடர்ந்து ஆற்றுவதற்கு தேவையானவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக்கூட்டத்தில், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், கப்பற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பாதூரியா, என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.