புற்றுநோயால் இறந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம்.!

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் ஆய்வாளர் ஸ்ரீதேவி. ‌கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த ஸ்ரீதேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் சக காவலர்கள், ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நல்லடக்கத்திற்காக ஸ்ரீதேவியின் உடல் எடுக்கப்பட்டது. அப்போது, துணை ஆணையர் சுப்புலட்சுமி தனது சக பெண் காவலர்களுடன் மயானம் வரை சுமந்து சென்றார்.