அமித்ஷா அழைப்பு: தமிழக பாஜக தலைவராகிறாரா ஏபி.முருகானந்தம்…?

Scroll Down To Discover
Spread the love

சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது பாஜக மாநில தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான போட்டியில், வானதி ஸ்ரீனிவாசன், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஏ.பி முருகானந்தம், ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்தச் சூழலில் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்ய தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளரான தமிழகப் பொறுப்பாளர் பி.முரளிதரராவ், ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் உ.பி. , கோவா,  திரிபுரா,  மஹாராஷ்டிரா, மாநிலங்களில், 40 – 45 வயதுள்ள நடுத்தர வயதுக்காரர்களே, தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். அதே பாணியில், தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கும், நடுத்தர வயது உள்ளவரே தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதேபோல் தி.மு.க., – அ.தி.மு.க., ஆதரவு முத்திரை குத்தப்படாமல், இரு திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கே, தலைவர் பதவிக்கு வரவேண்டுமென கட்சி தொண்டர்களும்,  இளைஞர்களும்  கூறிவருகிறார்கள்.

இந்நிலையில், பாஜகவின் தேசிய இளைஞரணித் துணை தலைவராக இருக்கும் ஏ.பி முருகானந்தம் மாநில தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்களின் ஆதரவும் பெருவாரியாக இவருக்கு உள்ளது. தற்போது தேசிய தலைவர் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறார் ஏ.பி.முருகானந்தம். இதன் இடைய  விஜயதசமி அன்று டிவிட்டர் தளத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஏபி. முருகானந்தம் அவர்கள் ஃபாலோ செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..!
…நமது நிருபர்