ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை – மேற்கு வங்கத்தில் நடந்த பயங்கரம்..!

Scroll Down To Discover
Spread the love

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கோபால் பால் என்னும் ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகவும் உள்ளார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன்(8) உடன் வீடு ஒன்றில் வசித்து வந்தார். பியூட்டி 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவரது குடும்பமே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர், தனது கர்ப்பிணி மனைவி, மகனுடன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவத்திற்கு, அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மாநில பா.ஜ., கட்சி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், தேசிய மகளிர் கமிஷன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.