பெண்களை கவுரவிக்க வேண்டும்.! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

நவராத்திரி, துர்கா பூஜை, துஷேரா, தீபாவளி, சாத் பூஜை ஆகிய பண்டிகைகள்
வரும் நாட்களில் கொண்டாடப்பட உள்ளன. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இன்று பேசுகையில், காந்தியின் 150 வது பிறந்தநாளின் போது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இ-சிகரெட்டுகளைப் பற்றி பேசிய அவர், நாகரிகம் என நினைத்து பல இளைஞர்கள் இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதாகவும், பின்னர் அதன் பிடியில் சிக்கி அதற்கு அடிமையாகி விடுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் சுவாசப்பிரச்சனை, இதயக் கோளாறு, நரம்பியல் கோளாறுகள் மற்றும் மரபணுக்களில் பாதிப்பு போன்ற பல பிரச்சனைகள் இ-சிகரெட்டுகளால் ஏற்படுகின்றன. உடல்நலத்திற்கு பல தீங்குகளை விளைவிப்பதால் இ-சிகரெட்டிற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குடும்பத்தில் எந்த ஒரு நபரும் சிகரெட் பிடிப்பவராக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இந்திய மக்களுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, கடவுள் லட்சுமியை புதிய வழியில் வரவேற்போம். இந்த ஆண்டு, நமது மகள்களை பெருமை சேர்க்கும் வகையில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க வேண்டும். அவர்களின் திறமை, வலிமையை நாரிசக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம். பெண்களின் சாதனைகளை சமூக வலைதளங்களில் ” #bharatkilaxmi’‘ என்ற ஹேஸ்டேக்கில் பதிவிடுவோம் என்றார்.