திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர், இசை கலைஞர், பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 17 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு, ஸ்விம்ஸ் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு வழியாக அளித்து வருகிறது. இதற்காக தேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிந்தது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு அலுவலர்கள் 20க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போலி இணையதள செயல்பாட்டாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்குரிய இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...