கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடை கிடைத்துள்ளது..!

தமிழகம்

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடை கிடைத்துள்ளது..!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடை கிடைத்துள்ளது..!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். டாடா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறிய தமிழக அரசுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR kit கருவிகளை டாடா நிறுவனம் தந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 20 ஆம் தேதி வரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதிக்கு கிடைத்ததாகவும் இதனை தொடர்ந்து 21 ஆம் தெதி முதல் நேற்று வரை 145 கோடியே 48 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 10 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அசோக் லேலண்ட் நிறுவனம் மற்றும் ஹிந்துஜா லேலண்ட் நிறுவனம் 2.75 கோடி ரூபாய், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் 1.65 கோடி ரூபாய், தமிழ்நாடு வாணிபக் கழகம் 1.2 கோடி ரூபாய், ஆர்.வெங்கசாச்சலம் 1.1 கோடி ரூபாய், டி.வி.எஸ் ஸ்ரீ சக்கரா லிமிட்டெட் 1 கோடி ரூபாய், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளம் 97,65,000 ரூபாய், சேஷாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ் லிமிட்டெட் 62 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும் ஜி.ஆர் தங்கமாளிகை 54,01,826 ரூபாய், மேட்ரிமோனி டாட் காம், வ.ஊசி துறைமுகம் தூத்துக்குடி, தமிழ்நாடு கோழி முட்டைப் பண்ணை விவசாயிகள் மற்றும் விற்பனை சங்கம், சங்கீதா கல்யான மண்டபம், சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ், டிவிஎஸ் நோவோடெமா எலொக்டோமெரிக் இஞ்சினியர், அறம் மக்கள் நலச் சங்கம், நாகா லிமிட்டெட் இயக்குனர், மேசி அறக்கடளை நிறுவனம், விநாயகா மிஷன் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் 32,37,862 ரூபாய், டி.வி.எஸ் சுந்தரம், இன்கோசர்வ் நிறுவனம், டிவிஎஸ் சப்ளை செயின் சொலுயுஷன் நிறுவனம், டவர்ஸ் கிளப் உறுப்பினர்கள் அண்ணா நகர், பி.எஸ்.டிஎஞ்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஷன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள், கல்ப் ஆயில் லூபிரிகண்ட்ஸ், SWELECT எனர்ஜி சிஸ்டம் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் 20 லட்சம் ரூபாய், ஸ்ரீ வள்ளி விலாஸ் சன்ஸ், பதிவாளர் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியோர் தல 15 லட்சம் ரூபாய், பி.எஸ்.என்.ல் கல்லூரி திண்டுக்கல் 13 லட்சம் ரூபாய், ஸ்ரீ சண்முகவேல் மில்ஸ் பிரைவேட் லிமிட்டெட் 12,50,000 ரூபாய்,
பொன்னி சுகர்ஸ் லிமிட்டெட், ஸ்ரீ வரலட்சுமி கம்பெனி, திருச்சங்கோடு வட்ட கொங்கு வேளாளர்கள், டாக்டர் ஏ நீதிநாதன், தி டையோசிஸ் ஆப் செங்கல்பட்டு சொசைட்டி, P.L.A பழனியப்பன், தி பிரிகெடு பள்ளி ஜேபி நகர், கே ராஜகோபாலன் அண்டு கோ, சுப்பையா செட்டியார், பைப் ஹேங்கர்ஸ் அண்டு சப்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், pioneer jellice இந்தியா பிரைவேட் லிமிட்டெட் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது

Leave your comments here...