கொரோனா வைரஸ் பிரதமர் மோடியின் யோசனையை பின்பற்றிய பிரிட்டன் நாடு

Scroll Down To Discover
Spread the love

கொரோனாவை தடுக்க கடந்த 22ம் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்த மோடி, தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரையும் பற்றி கவலைப்படாமல் கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

அதற்காக கடந்த 22ம் தேதியன்று மாலை 5 மணியளவில் மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்று 5 நிமிடம் கைகளை தட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 22ம் தேதி மாலை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கைகளை தட்டி தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

மோடியின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டனிலும் நேற்று முன்தினம் மக்கள் கைகளை தட்டி மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்