வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு…!!

Scroll Down To Discover

தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் உள்ள பெயர்கள், முதன்மையாக பெரிய அளவில் தமிழில் இருக்க வேண்டும். அதன்கீழ் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இடம் பெற வேண்டும்.

சில வணிக நிறுவனங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ளது. இதுபற்றி தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகித்தால், ஆங்கிலத்துக்கு 2வது இடமும், பிற மொழிகளுக்கு 3வது இடமும் ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.