பன்னிரு திருமுறைகள் தெலுங்கு மொழி பெயர்த்த நூல் – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் வழங்கிய மறவன் புலவர் சச்சிதானந்தம்..!

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மாநிலத் துணை முதலமைச்சர் மாண்புமிகு பவன் கல்யாண் தலைமையில்
தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் பன்னிரு திருமுறை 11,268 பாடல்களும் ,தேவாரம் முதல் பெரிய புராணம் வரை மொழி பெயத்து எழுதிய நூலின் மீது நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மறவன் புலவர் பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்களின் 40 ஆண்டு கால நண்பர் கே.எசு.இராதாகிருஷ்ணன் ஒழுங்காக்கிய கலந்தாய்வுக் கூட்டம் இந்த கூட்டத்தில் தமிழில் பன்னிரு திருமுறை. 11,268 பாடல்கள் தேவாரம் முதல் பெரிய புராணம் வரை தமிழிலிருந்து தெலுங்குக்குத் திருமலை திருப்பதி தேவத்தானத்தார் மொழி பெயர்ப்பித்தனர்.
தெலுங்குக்கு மொழிபெயர்ப்புப் பணியில் தேவத்தானத்தாருக்கு ஒருங்கிணைப்பாளரான சச்சிதானந்தம் அவர்கள் (2009-2025) 16 ஆண்டு காலப் பணி. மரியாதை செய்தார்.
தெலுங்குப் பன்னிரு திருமுறை அச்சிட்ட நூல்களாக, 16 பகுதிகள் கொண்ட ஒரே தொகுதி. 19,000 பக்கங்கள். ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சர் மாண்புமிகு பவன் கல்யாண் அவர்களிடம் அறிஞர் சச்சிதானந்தம் வழங்கினார். 19000 பக்கங்கள் கொண்ட தெலுங்கு நூல் இஃது ஒன்றே என அங்கு வந்தோர்கள் அனைவரும் சச்சதானந்தம் அவர்களிடம் தெரிவித்தனர்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிஞர் சச்சதானந்தன் வெளியிட்ட நூல்களின் சரத்துகள் குறித்து உரையாற்றினார் துணை முதலமைச்சர் பவன்கல்யாண் தமிழை நன்றாக எழுதுபவர் பேசுபவர். இறை பணியே தேசிய பணியாக செய்து வரும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் சிறப்பாக உரையாற்றினார்.
தவத்திரு அபிராமிப் பட்டரின் கலையாத கல்வியும் பாடல்வழி அவர் சிறந்து வாழ சச்சிதானந்தம் துணை முதல்வரை வாழ்த்தினார். இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தியினை கீழை மறவன் புலவர் சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...