புஷ்பா 2 படம்… நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன் – நடிகர் அல்லு அர்ஜுன்

Scroll Down To Discover
Spread the love

ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிவித்துள்ளார் .

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் . மேலும் அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்று போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்போம். இந்தச் சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும், புஷ்பா 2 படக்குழுவினரிடம் இருந்து ரேவதி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் எனவும் விரைவில் அவர்களைச் சந்திக்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.