ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த குழு அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டது.

ஷஷாங் ஷகிர் ஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த இந்த பொதுநல மனுவில், ஓ.டி.டி. தளங்களில் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என கூறி சில திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய, உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகையால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரர் இந்த விவகாரத்தை தங்கள் குறைகள் குறித்து மத்திய அரசின் சம்பந்தபட்ட துறையில் முறையிடலாம் என தெரிவித்தது. இதையடுத்து, அந்த மனுவையும்உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.