இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் ம.பி.,யின் இந்தூரும், குஜராத்தின் சூரத் நகரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. இந்தூர் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.‛.
சுவச் சுவேக்ஷான்’ திட்டத்தின் கீழ், கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 4,477 நகரங்களில், குப்பைகளை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், நிர்வகித்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சிசெய்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தூய்மைப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. 12 கோடி பேர் தங்களது கருத்தினை பதிவு செய்தனர்.
இந்த பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.இந்த பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக ம.பி.,யின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளது.
3வது இடத்தை மஹாராஷ்டிராவின் நவி மும்பையும்
4வது இடத்தை ஆந்திராவின் விசாகப்பட்டினமும்
5வது இடத்தை ம.பி.,யின் போபாலும்
6வது இடத்தை ஆந்திராவின் விஜயவாடாவும்
7 வது இடத்தை டில்லி மாநகராட்சியும்
8 வது இடத்தை ஆந்திராவின் திருப்பதியும்
9 வது இடத்தை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரமும்
10வது இடத்தை மஹாராஷ்டிராவின் புனே நகரமும் பிடித்துள்ளன.
தூய்மையான மாநிலங்களில் மஹாராஷ்டிரா, ம.பி., மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

														
														
														
Leave your comments here...