ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!!

Scroll Down To Discover

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் உரிய காலத்திற்குள் அனுமதி வழங்க மறுப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசோதா மற்றும் கோப்புகளுக்கு அனுமதி வழங்கிட உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் , ஆளுநர் அலுவலகம் பா.ஜ., அலுவலகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.