சபரிமலையில் நடை திறப்பு – புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு

Scroll Down To Discover
Spread the love

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல் சாந்தி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெற வில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெற்றது.

இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.வரும் 22ம் தேதி வரை ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, அத்தாழபூஜை இவற்றுடன் தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜை உண்டு. 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.