ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Scroll Down To Discover
Spread the love

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது.

அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். இஸ்ரோ நிறுவனம் சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து அவர், ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என அறிவித்தார். இந்நிலையில், சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கிய ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார். Chandrayaan 3 Cabinet