தேசிய கல்விக் கொள்கை.. தரமான கல்வி மற்றும் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

Scroll Down To Discover
Spread the love

தேசிய கல்விக் கொள்கை தரமான கல்வி மற்றும் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

கோவாவில் ராஜ்பவனில் நடைபெற்ற, கோவா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், திரவுபதி முர்மு பேசியதாவது: டிகிரி படிக்கும் மாணவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்பதை அறிந்து மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.


தன்னம்பிக்கை மற்றும் கல்வியில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை தரமான கல்வி மற்றும் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். தேசிய கல்விக் கொள்கையானது திறன், மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.

கோவா பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த மையமாக மாறுவதற்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இன்று நீங்கள் சம்பாதிக்கும் பட்டங்களும் தங்கப் பதக்கங்களும் உங்களுக்கு வேலை கிடைக்க அல்லது தொழில் துவங்க உதவும்.

ஆனால் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்வது தைரியம் தான். சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், ஒருவர் ஒருபோதும் தைரியத்தை கைவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.