ஜி 20 உச்சி மாநாடு – டெல்லியில் 3 நாள்கள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

Scroll Down To Discover
Spread the love

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் வருகிற செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் டெல்லியில் வருகிற செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி20 தலைவர்கள், பல்வேறு நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள், நம் நாட்டின் அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இதற்கான தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நாள்களில் போக்குவரத்தும் மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து பிரச்னைகளைத் தவிர்க்கவும் டெல்லியில் வருகிற செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்