சுதந்திர தினம்.. அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடல் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுவதும் 15ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.