எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்..!

Scroll Down To Discover
Spread the love

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த செய்திகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்திகளை எடிட் செய்ய முடியும்.

அதாவது நீங்கள் ஏற்கனவே அனுப்பிய மீடியா செய்திகளில் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்யலாம் அல்லது கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம். ஆனால் வேறு சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியை உங்களால் திருத்த முடியாது.

இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுப்பிய மெசேஜை இரண்டு அல்லது மூன்று வினாடிகளுக்கு அழுத்தி பிடித்து இருக்க வேண்டும். பிறகு அதில் தோன்றும் புதிய நினைவில் எடிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் அனுப்பிய மெசேஜை திரும்ப எடிட் செய்து கொள்ளலாம். இதன்மூலம் செய்தியைத் தவறாக அனுப்பிவிட்டால் அடுத்த 15 நிமிடத்துக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம்.

தற்பொழுது இந்த அம்சம் ஐஓஎஸ் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால், இணையத்தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அம்சம் செயலில் உள்ளது. மேலும், பயனர் அனுப்பிய செய்தியைத் திருத்தும் அம்சத்தை ஆப்பிள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.