பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 22 பேர் உயிரிழப்பு, 100 பேர் படுகாயம்..!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்தது.

கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்துக்குள்ளனது. இதில், ரயிலில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி மொஹ்சின் சைல் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.