லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் – NIA விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Scroll Down To Discover
Spread the love

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்ட வழக்கை, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க இன்று(ஏப்ரல் 18) மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ண கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக, இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவினை பயங்கரவாத மற்றும் தீவிரவாத ஒழிப்புக்கான (சி.டி.சி.ஆர்) என்ற அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்ட வழக்கை, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க இன்று(ஏப்ரல் 18) மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.