ராமேஸ்வரம் அருகே கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.1.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – இந்திய கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

ராமேஸ்வரம் அருகே ரூ.1.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்

போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நான்கு பேருடன் சென்ற படகினை தடுத்து நிறுத்தினர். இந்த படகு அதிவேகமாக சென்று தப்பிக்க முயற்சி செய்த போது கடலோர காவல்படையினர் அதனை துரத்திச்சென்று பிடித்தனர்.

இந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடியாகும் என்று என கூறப்பட்டுள்ளது