பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதிய விபத்து : பள்ளிக்குழந்தைகள் உள்பட 10 பேர் பலி..!

Scroll Down To Discover
Spread the love

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த பள்ளிக் குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர்.

குழந்தைகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி பள்ளிக் குழந்தைகள் நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தம் மீது வேகமாக மோதியது. பின்னர் அங்கிருந்த மின் கம்பம் மீது லாரி மோதியது.

அதில், மின் கம்பம் சரிந்து விழுந்து சாலையில் வந்து கொண்டிருந்த வேன் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மின் கம்பம் விழுந்ததில் வேன் டிரைவரும் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.