திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ-1.33 கோடி உண்டியல் காணிக்கை

ஆன்மிகம்தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ-1.33 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ-1.33 கோடி உண்டியல் காணிக்கை

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், பக்தர்கள் ₹1.33 கோடி செலுத்தியிருந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதில் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ₹1 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 31 மற்றும் 290 கிராம் தங்கம், 919 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, காணிக்கை தொகையை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தினர். கடந்த சில மாதங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் உண்டியல் காணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...