வரும் 25ந் தேதி உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்.!

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

உத்தர பிரதேச உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்., முதல் மார்ச்., 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களான கோவா, மணிப்பூர்,உத்தரகண்ட், உத்தர பிரதேச ஆகிய மாநிலங்களில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டன.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து வரும் 25ம் தேதி இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்க உள்ளார்.