பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு – 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை – தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரை..!

Scroll Down To Discover
Spread the love

மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளோம் இப்போதே ஹோலி கொண்டாட்டம் துவங்கி விட்டது என பிரதமர் தொண்டர்களிடையே வெற்றி உரை நிகழ்த்தினார்.

5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றதையடுத்து இன்று டில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர். இதையடுத்து ஏராளமான தொண்டர்களும் அங்கு குவியத்துவங்கினர். பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே வெற்றி உரையை நிகழ்த்தினார். அப்போது மக்கள் மனதில் நாம் இடம் பிடித்து உள்ளோம் . பாஜக அரசின் மீதான மக்களின் நம்பிக்கைையே இந்த வெற்றியை காண்பிக்கிறது. இப்போதே ஹோலி கொண்டாட்டம் துவங்கி விட்டது வெற்றிக்காக பணியாற்றிய கட்சியினருக்கு நன்றி என கூறினார்.பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு; பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது.

உத்தரபிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது. உ.பி.-யில் முதல்முறையாக பாஜக 2வது தொடர் வெற்றி